ரயில் விபத்து – இறந்தவர்களின் உடல்களை பரிசோதிக்க மருத்துவக் குழு அமைப்பு!

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில்  இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடய

train

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில்  இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் சந்திரசேகரன், சதாசிவம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இறந்தவர்களின் 9 பேரின் உடல்களை 20 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை செய்கிறது.

இன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் சுற்றுலா ரயிலின் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான ஆய்வுகள் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் நிலையில், தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் ஆன்மிக பயணம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.