இன்று தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்...!

Today marks the third mega vaccination camp in Tamil Nadu.

இன்று தமிழகத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இன்று தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.