மெகா தடுப்பூசி முகாம் – இதுவரை 13.44 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

At the mega vaccination camp, as of 4.30 pm, 13.44 lakh people had been vaccinated against corona.

மெகா தடுப்பூசி முகாமில், மாலை 4.30 மணி நிலவரப்படி 13.44 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், இந்த தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நான்காவது வாரமாக தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், மாலை 4.30 மணி நிலவரப்படி 13.44 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.