மெகா தடுப்பூசி முகாம் : 7 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

As the fourth phase of the mega vaccination camp is being held in Tamil Nadu today, 10 lakh people have been vaccinated in 7 hours.

தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், 7 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 12, 19 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் நான்காம் கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதியில் நடக்கக்கூடிய இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசிகள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முகாமில் காலை 7 மணி முதல் தற்போது வரை அதாவது கடந்த ஏழு மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.