மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி.
புராதன சின்னங்கள், பழையமான கோயில்கள் பாதிக்கப்படாத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. கவுதமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
விருங்கப்பாக்கத்தில் 800 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கோயில் ராஜகோபுரம், கொடிமரம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே 15 அடி நிலத்தை கையகப்படுத்த முயற்சி என மனு அளித்துள்ளார். விருங்கப்பாக்கம் கோயில் பகுதியில் மெட்ரோ ரயில் பாதை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.