வேலூரில் மினி டைடல் பார்க்.. ஓசூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை – முதல்வர் திறப்பு!

வேலூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

வேலூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து நிலை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

unknown node

அதன்படி, விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுபோன்று, ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையன திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையையும், சென்னையில் உள்ள ஜி.எக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.