அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ‘திடீர்’ உடல்நலக்குறைவு.? எப்போது டிஸ்சார்ஜ்.?

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நேற்று திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Mnister Anbil Mahesh

சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அன்பில் மகேஷ். இவர் அவ்வப்போது மாவட்டந்தோறும் பள்ளிகளிகளுக்கு விசிட் அடித்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிகளை ஆய்வு செய்வது வழக்கம் . அப்படி நேற்று காஞ்சிபுரம் , வாலாஜாபாத், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு நேற்று இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உணவு ஒவ்வாமை காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.  சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் நலம்பெற்று வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss