தமிழக ஆளுநருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு!

Fisheries Minister Duraimurugan called on Tamil Nadu Governor NR Ravi.

தமிழக ஆளுநர் என்.ஆர் ரவியை நேரில் சென்று சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் என்.ஆர் ரவியுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 5ல் தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

அவை முன்னவர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநர் என்ஆர் ரவியிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.