காவிரி வரலாறு தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் கருத்து – துரைமுருகன் அறிக்கை!

CauveryRiver - Duraimurugan

கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் காவிரி நீர் பிரச்சனைக்கு பல ஆண்டு கால வரலாறு இருக்கிறது. இந்த நிலையில், சமிபத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. ஓரணியில் இருப்பவர்கள், ஏன் காவிரி பிரச்னையை நேரில் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது, இந்த சர்ச்சை கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சருக்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களை நான் இரண்டு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன். காவிரியிலிருந்து தண்ணீரை திறந்துவிடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குதான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய், உச்ச நீதிமன்றம் சில சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.

இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர. மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாததனம் தான். பாவம், அரசியல் பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்