ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை.
அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். 2023-24ல் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை கல்லூரியில் கொண்டாடுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை குறித்து தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் நேற்று நடத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று, அமைச்சர் பொன்முடி தலைமையில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
