5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

திருக்கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர் பணியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்பதை மாற்றி அமைத்து, அனைத்து சாதியினரும்

female readers

திருக்கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர் பணியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்பதை மாற்றி அமைத்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அதற்காக 1 வருட அர்ச்சகர் படிப்பை அரசு அளித்து வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய ஊர்களில் தலா 1 பயிற்சி பள்ளி வீதம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான ஒருவருட பயிற்சியை 94 பேர் முடித்துள்ளனர். அதில் ஸ்ரீரங்கத்தில் பயிற்சி முடித்த ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா எனும் 3 பெண்களும்அடங்குவர்.

இவர்களுக்கு அண்மையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு வருட பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இங்கு ஒருவருட அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்ளுக்கு அடுத்ததாக ஏதேனும் ஒரு கோவிலில் குறிப்பிட்ட கால அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு கோவில்களில் எப்போது காலிப்பணியிடங்கள் வருகிறதோ அப்போது இவர்களுக்கு விதிகளின்படி பணி வழங்கப்படும்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கியுள்ளார். மேலும்,காலியாகவுள்ள மேலும் 73 ஓதுவார் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற்ற 160க்கும் மேற்பட்டவர்கள் உதவி அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.