பயிர் சேதத்தை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு – முதலமைச்சர் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் வைக்கப்படுவர் என்று முதலமைச்சர் அறிவிப்பு.

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் வைக்கப்படுவர் என்று முதலமைச்சர் அறிவிப்பு.

மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்றுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்வர்.

அமைச்சர்களுடன் வேளாண்துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் கள ஆய்வு செய்வர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முதல்நிலை ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுவர் என்றுஅறிவிக்கப்ட்டுள்ளது . பயிர் சேதம் குறித்து கள ஆய்வினை செய்து விவசாயிகளை சந்தித்து விவரங்களை பெற முதலான்ச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்களில் சேதமடைந்துள்ளது.