தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

DMK leader Mk Stalin has posted a message of condolence on the Twitter page of musician AR Raghuvan's mother.

இசை புயல் ரகுமானின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கழக ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இசை புயல் ரகுமானின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறி, தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலக புகழினை பெற்றிடும் வகையில், ரகுமான் அவர்களை ஆளாக்கியத்தில் பெரும்பங்கு வகித்தவர் அவரது அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல் என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node