நன்றி கலந்த வருத்தம் – பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்த எம்எல்ஏ ராமகிருஷ்ணன்!

ஆளுநர் ஆர்என் ரவி உரைக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திமுக எம்எல்ஏ தீர்மானம் தாக்கல் செய்தார்.

ஆளுநர் ஆர்என் ரவி உரைக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திமுக எம்எல்ஏ தீர்மானம் தாக்கல் செய்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்தார் திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன். கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். பின்னர் ஆளுநரின் உரை சர்ச்சைக்கானது.

அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில், சில வார்த்தைகளை தவிர்த்தும், சில வார்த்தைகளை சேர்த்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் உரைக்கு பிறகு முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேரவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார்.

இந்த நிலையில், இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்தார் திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன்.