பிரதமர் மோடி சமீபத்தில் உலக மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிப்பார்கள் என கூறியிருந்தார். அதன்படி உலக மகளிர் தினமான இன்று மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஏழு பெண்கள் பெண்கள் நிர்வகிக்கின்றனர்.
அதில் தமிழகத்தைச் சார்ந்த செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் இடம்பெற்றுள்ளார். இவர் ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். எனக்கு ஆர்வமாக இருப்பதை செய்யும் போது எனக்குள் ஒரு உத்வேகம் , அதிகாரம் கிடைக்கிறது.
குறிப்பாக பெண்கள் முன்வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் இதனால் நம் பசியில்லா உலகை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடியும் சமூக வலைப் பக்கத்தின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
unknown nodeசினேக மோகன்தாஸ் பதிவிட்ட இந்த பதிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.