ஆவடியை அடுத்த பட்டாபிராம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் பட்டாபிராம் பாரதியார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்த வீட்டில் சுப்பிரமணி , கணேசன் , கனகராஜ், ரவி , யாபேஸ் ஆகிய 5 பேர் வாடகைக்கு இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது சுப்பிரமணியின் மகன் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கழிவறை செல்வதற்காக வெளியே எழுந்து வந்தபோது மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நள்ளிரவில் மர்பநபர்கள் தங்களது கை வரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரிகிறது.
மேலும் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.