தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையால் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்.11-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது. இந்த சமயத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில், ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம்:
இந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்.11-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 11-ல் கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் திருப்தி:
கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. அமைச்சர் அளித்த உறுதியின் மேல் நம்பிக்கை வைத்தும், தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையால் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியுள்ளனர்.
போராட்டம் வாபஸ்:
கடந்த ஆட்சிக்காலத்தில் அழைத்து பேசுவதற்கே பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். கடந்த ஆட்சியை போல் இல்லாமல் எங்கள் கோரிக்கைகளை உள்வாங்கி பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டது. எங்களிடம் நியாயமான முறையில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்றும் குறிப்பிட்டனர்.