முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

Published by
பால முருகன்

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது எனவும், சமீபகாலமாக கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் .

அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார். அவரை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூற மாட்டேன் புள்ளிவிவரங்களுடன் சட்டசபையில் தெரியப்படுத்துவேன்.  கடந்த 2024’ல் மட்டும் 4,571 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எங்கேயாவது குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் மேற்கொள்ளப்படும் துரித சம்பவங்கள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இருவழியிலும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. தொடர் குற்றவாளிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைதுகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதைப்போல, கொலை சம்பவங்களும் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக கொலைகள் நடந்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. அதைப்போல, அதற்கு அடுத்த ஆண்டாள் 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன.

ஆனால், கடந்த 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவத்தை எல்லாம் பழனிசாமி மறந்துவிட்டார். அவரை மாதிரி ‘டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லும் ஆட்சி அல்ல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

11 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

12 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago