கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க, 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.