கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்ததை காவல்துறை.
கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது:
unknown nodeகோவையில் நீதிமன்றம் அருகே ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தந்தது, கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது தனிப்படை காவல்துறை. கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், விக்ரம், விக்னேஷ் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் நீதிமன்றம் அருகே கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் நேரடி தொடர்புடைய 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற வளாக அருகே கொலை:
unknown nodeநேற்று முன்தினம் கோவையில் குற்ற வழக்கு ஒன்றில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது, அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் கோகுல் என்பவர் சம்பவ இயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவை நீதிமன்ற வளாகம் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை கும்பலை பிடிக்க தனிப்படை:
unknown nodeஇந்த சம்பவத்தை தொடர்ந்து, கொலை கும்பலை பிடிக்க தனிப்படை போலி அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதன்பின், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 5 பேரையும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட 2 பேரை மேட்டுப்பாளையம் அருகே துப்பாக்கியால் சுட்டு நேற்று கைது செய்தது காவல்துறை. இந்த நிலையில, கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.