ஸ்டாலினுக்கு முருகன் வரம் தரமாட்டார்., எங்களுத்தான் – முதல்வர் விமர்சனம்

Murugan will not bless MK Stalin. Chief Minister Palanisamy has said that he is going to give a boon to AIADMK.

முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டம் புலிக்குளம் பகுதியில் இரண்டாவது நாளாக இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகாவுக்குத்தான் வரம் தர போகிறார் என்று மக்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.

கோவையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிப்பு அமைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். முக ஸ்டாலின் உண்மையை சொன்னால் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் கடவுளே வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் தரமாட்டார் என முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.