தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! சத்யபிரதா சாஹூ உத்தரவு 

this news given information about Must have to close the shops in Tasmania from April 16 to April! Satyabrata Sahu order

ஏப்ரல் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ உத்தரவு  பிறப்பித்துள்ளார்

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ உத்தரவு  பிறப்பித்துள்ளார்.அதில்,ஏப்ரல் 16ம் தேதி முதல் 18ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” .அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் விடுமுறை அளிக்கவும்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.