உருமாறிய கொரோனா வைரஸ்! தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

On the 28th Chief Minister Palanisamy will consult their medical experts. The curfew is expected to end on December 31.

வரும் 28-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை. ஊரடங்கு  டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை  அதிகரிக்க வாய்ப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நீடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், ஊரடங்கு  டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.