போராளி சூர்யாவுக்கு எனது வாழ்த்துக்கள் – திருமாவளவன்

பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்.

பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி,  திரைக்கு வந்துள்ள ஜெய் பீம் திரைப்படமானது அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள்  பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. அந்த வகையில், இப்படம் குறித்த சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகமான நேர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்த நிலையில், சூர்யா, திருமாவளவன் அவர்களுக்கு நன்னாரி கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைநாயகன் சூர்யாஅவர்கள், பழங்குடியினரின் உரிமைப்போராளி பிர்சா முண்டாபிறந்தநாளில் எமக்கு நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்குஎமது வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node