#BREAKING: சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் -மு.க அழகிரி..!

I will announce the decision after consulting with supporters. He has given an interview that my role will be in the election of the Assembly

கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களமிறங்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.

சமீபத்தில் மு.க.அழகிரி பாஜகவில் இணையுள்ளதாகவும், நடிகர் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அழகிரி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, புதிய கட்சி தொடர்பாக கேள்விக்கு போகப்போகத்தான் தெரியும் என  விளக்கமளித்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவை அறிவிப்பேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு இருக்கும் என பேட்டி அளித்துள்ளார்.