பொள்ளாச்சி சம்பவத்தைப்போல செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகை வாலிபர்!!!!

This news gives information about Nagappa is a young man who is threatening to take pictures in the cell phone like Pollachi incident

நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர்  சுந்தர் (வயது 23).

இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர்  சுந்தர் (வயது 23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுந்தர் செல்போன் கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும்  அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்கள் இருவரையும் காதலர்களாக மாற்றி உள்ளது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுந்தர் தன் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என கூறி அழைத்துள்ளார். சுந்தர் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் வர சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை காரைக்காலில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார்.

அந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல்  வன்கொடுமை செய்தார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண்ணிடம் சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இளம்பெண்  சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அந்த இளம்பெண் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை  சுந்தர் கூறியதாக தெரியவருகிறது.

பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.