நாகர்கோவில் சார்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் உடன் சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவி மற்றும் வாலிபர் இருவரையும் போலீசார் மீட்டனர்.
பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி கூறினார். இதற்கு மாணவியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ( 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியின் தாய், அசோக்குமார், கார்த்திக் மற்றும் பால், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கன்னியாகுமாரி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…