FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

வன்கொடுமை சம்வபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதியும் செய்து தர தமிழக டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FIR

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அப்போது பதியப்பட்ட FIR விவரங்கள் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் மாணவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இன்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் எனும் முதல் தகவல் அறிக்கை ரிப்போர்ட்டை காவல்துறை முடக்கியுள்ளது. இந்த சூழலில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வந்த பதிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ” சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த கொடூரமான செயலை ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கும்.

பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை BNS, 2023 இன் பிரிவு 71ஐ FIR இல் சேர்க்கவும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் எனவும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீமதி. விஜய ரஹத்கர் தமிழக காவல்துறைக்கு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பழைய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்கு இருந்தும்  தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை எழுப்புகிறது” எனவும் தேசிய மகளிர் ஆணையம்  தெரிவித்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்