தேசிய கொடி விவகாரம்: வழக்கை ரத்து செய்ய நடிகர் எஸ்.வி.சேகர் மனு தாக்கல்!

Actor SV Sehgar has filed a petition in the court seeking cancellation of the case filed against him for insulting the national flag.

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய கொடியை அவமதிக்கவில்லை என்றும் களங்கமான தேசிய கொடியை தான் முதல்வர் ஏற்றப்போகிறாரா என்று மட்டுமே கேள்வி கேட்டேன் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 2020ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.