“உதவி தேவையா?…எங்களை அழையுங்கள்” – DYFI அறிவிப்பு…எந்தெந்த பகுதிக்கு தெரியுமா!

Published by
Edison

சென்னை:மழை வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ள சென்னை பெருநகர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உதவி எண்களை அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.அதேபோல,வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால்,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ள 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.அதேபோல,மின்தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில்,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.மேலும்,மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்,சென்னை பெருநகரப் பகுதியில் மழை வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ள வசதியாக தென் சென்னை பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உதவி எண்களை அறிவித்துள்ளது.எந்தெந்த பகுதிக்கு உதவி எண்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி,அவசர மருத்துவ உதவி /பிரசவ கால மருத்துவ உதவி, மின்கம்பம் அறுந்து /மரம் சாய்ந்து விழுந்ததால் பிரச்சனை,வீடுகளுக்குள் நிற்க இயலாத அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் தங்க இடம் மற்றும் உணவு இல்லாத சூழல் ஆகிய தேவைகளுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  • வேளச்சேரி: திவாகர்- 9087674727
  • சோளிங்கநல்லூர்:சரத்குமார்- 9710702365
  • தாம்பரம் :காண்டீபன்- 9655601539
  • மதுரவாயில்:இமயவர்மன்- 8190034318
  • ஆலந்தூர்:ராஜாமணி- 9094616138
  • சைதாப்பேட்டை:பாலாஜி- 9500135291
  • விருகம்பாக்கம்:வினோத்- 9551901911
  • பல்லாவரம் : ஹேமக்குமார்- 8807196922
  • மயிலாப்பூர் :மகேஷ்- 9003140584
  • தி.நகர் : தென்னரசு-9789899235.

அதேபோல,மத்திய சென்னை பகுதியில் உள்ள மக்கள் தொடர்பு கொள்ளவும் DYFI எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதோ,

  • மாவட்ட தலைவர் – 9940113666
  • மாவட்ட செயலாளர் – 7358264302
  • மாவட்ட பொருளாளர் – 9962726128.

மேலும்,கீழ்கண்ட பகுதி மக்களும்,கீழே கொடுக்கப்பட்டுள்ள DYFI உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

  • மீஞ்சூர் – 9884207670,
  • பொன்னேரி – 91764 53597
  • கவரபேட்டை – 9944988536,
  • சோழவரம் – 6380188549,
  • கும்மிடிப்பூண்டி – 98844 65348,
  • பெரிய பாளையம் – 8939099733,
  • ஊத்துக்கோட்டை – 8939448817,
  • திருவள்ளூர் – 99409 91361,
  • பூவை – 96000 70363,
  • பூண்டி – 97878 86508,

இந்த எண்களை மக்கள் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

9 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

9 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

10 hours ago