#BREAKING: நீட் தேர்வு.. தமிழகத்தில் மூன்றாவது மாணவர் உயிரிழப்பு..!

நாளை கொரோனா மத்தியிலும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு

நாளை கொரோனா மத்தியிலும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மன உளைச்சல் காரணமாக இன்று  அதிகாலை மதுரையை சார்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்று மாலை தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தனது வீட்டில் தாய் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.