பேச்சுவார்த்தை தோல்வி..! பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில், நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  பால்கொள்முதல் விலைக்குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

போராட்டம் தொடரும்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன்,  திட்டமிட்டபடி இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் தொடரும். ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை தர வேண்டும் என அரசிடம் தெரிவித்தோம்.

தனியார் நிறுவனங்கள் அரசை விட லிட்டருக்கு ரூ.10 அதிகமாக தருகின்றன. கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை கொடுத்து விடுவார்கள் என  தெரிவித்து இருந்தார்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

இந்த நிலையில்,  பால் உற்பத்தியாளர்கள் பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும். எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.