தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். விவசாயத்தை மேம்படுத்துவதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதிலும் இவரது பணி மிகவும் சிறப்பாக இருந்தது.
விவசாயம் குறித்த இவரது செயல்கள் மற்றும் பணிகள் அனைத்தும், மற்ற விவசாயிகளுக்கு பாடமாக அமைந்தது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளானார். இதனையடுத்து அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி 2018, டிசம்பர்-6ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடபுத்தகமான, தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த தகவல்களை தமிழக அரசு சேர்த்துள்ளது.