நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.

CBCID

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.

நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதானவர்களுக்கு பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் புகார்தாரர் அருண்குமார், தாயார், தந்தை ஆஜரானார்கள். ஐஜி அளவில் உயர்மட்ட விசாரணை வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி சங்கரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.