7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.