“சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் ரூ.103 கோடி செலவில் கட்டப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
சென்னை சைதாப்பேட்டை தாதாண்டர் நகரில் 190 “சி” வகை அரசு அலுவலர்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். அதன்படி, “சி” வகை அரசு அலுவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் ரூ.103 கோடி செலவில் கட்டப்படும். அரசு பொது கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்பு வெளியிடப்படும் என்றார்.
சென்னை முதல் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரையிலான சாலையை 4 வழித்தடத்திலிருந்து 6 வழித்தடச்சாலையாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று நெடுஞ்சாலைகள் & சிறுதுறைமுகங்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அனைத்து மாநிலங்களும், தமிழ்நாட்டைப் பின்பற்றி திட்டங்களை உருவாக்கலாம் என நினைக்கிறார்கள். பசி, உறக்கம் எதையும் கருதாமல் 24 மணி நேரமும் தூங்காமல் உழைக்கிறார் முதலமைச்சர். சித்தாந்தரீதியாக எதிர்க்கருத்துகளை உடையவர்தான் முதலமைச்சர், ஆனால் தனிப்பட்ட முறையில் யார் மீதும் பகையில்லாதவர் என கூறினார்.