#BREAKING: புதிய கட்டுப்பாடுகள்?- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை!

With the announcement of the new regulations coming out tomorrow, Chief Minister MK Stalin's advice.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜனவரி.3 முதல் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டியிருந்து. சுழற்சி முறையில் இல்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளது.

ஓமைகாரன் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா என்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தலாமா எனவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், WHO தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் உள்ளிட்ட மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.