பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்தார் நித்தியானந்தா.
பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா சிவா பதிவிட்டுள்ளார். அதில், நித்தியானந்தா சுவாமியிடமிருந்து கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றதில் ஆசிர்வாதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கைலாச நாட்டுக்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பலர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் அவ்வப்போது தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் விருதுகள் வழங்கி வருகிறார். அந்தவகையில், பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருதை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node