நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் – மதுரை ஆதீனம்

Nithyananda has no intention, he will be arrested if he comes here, said the 93rd Madurai Athena.

நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என்று 293வது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதின மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை 293-வது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி, மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். கிராம கிராமமாக சென்றுள்ளேன். அரசே ஆலையத்திற்கு வெளியேறு என்ற போராட்டத்துக்கு கன்னியாகுமரில் இருந்து சென்னை கோட்டை வரை நடந்தே வந்தேன் என தெரிவித்தார்.

அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன். நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். சமய நல்லிணக்க மாநாடு போன்று ஒரு நிகழ்ச்சியில் வரும் காலத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, அழைப்பு விடுதல் போகலாம், ஆனால், அவர்கள் நம் சமயத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.