நிவர் புயல் – தலைமை செயலாளர் ஆலோசனை

Chief Secretary Shanmugam has consulted with all the District Collectors on the Nivar storm precautionary measures.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நிவர்  ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் -மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.