விஸ்வரூபம் எடுக்கும் நிவர் புயல்! சென்னையில் கனமழை!

Nivar storm formed in the Bay of Bengal. As it is raining again in many places in Chennai, the normal life of the people is affected.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல். சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது.

இந்நிலையில்,சென்னையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.