நிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.!

Indian Meteorological Department has said that Nivar, which is currently experiencing a severe storm, will weaken in the next three hours

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த நிலையில்,  தற்போது தீவிர புயலாக உள்ள நிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி புதுச்சேரியில் – 23.7செ.மீ , கடலூர் – 24.6 செ.மீ, சென்னை – 8.9 செ.மீ, காரைக்கால் – 8.6 செ.மீ, நாகப்பட்டினம் – 6.3 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node