#NivarCyclone : படிப்படியாக மின்விநியோகம் செய்யப்படும் – அமைச்சர் தங்கமணி

Arrangements will be made to supply electricity to rainwater harvesting areas in all parts of Chennai by this afternoon

இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும்  மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி  அளிக்கிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி  அளிக்கிறது. இதனையடுத்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும்  என்றும்,மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும், மின் விநியோகம் தொடர்பாக அவசர எங்களை அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.