இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் – சீமான்

Any actor including Vijay should be afraid to come into politics as both Rajini and Kamal are available in the Assembly elections

சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியில்,  பரப்புரையின் போது எம்ஜிஆர் குறித்து பேசினால் ஓட்டு அனைத்தும் அதிமுகவின் இரட்டை இலைக்கு தான் போடுவார்கள். ரஜினியும் கமலும் எம்ஜிஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்கு தான் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றும், எம்ஜிஆர், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் அதனால் தான் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி செய்தார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை தன்னால் கொடுக்க முடியும் என ரஜினிகாந்தும், எம்ஜிஆரின் நீட்சி நான் என கமலஹாசனும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.