மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது – முதல்வர் எச்சரிக்கை.!

Puducherry Chief Minister Narayanasamy has warned Governor Kiranpedi that no one should interfere in matters of religious belief.

மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்று எழுந்தியிருந்தார்.

அந்த கடிதத்துக்கு விளக்கமளித்துள்ளார் முதல்வர், பிரெஞ்ச் கலாச்சாரத்துடன் இணைந்துள்ள புதுச்சேரியில் விதிகளுக்குட்பட்டே புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது. மத விழாக்களில் மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறோம் என்ற எண்ணம் வர வேண்டும் என்று கிரண் பேடி கடிதத்துக்கு விளக்கமளித்துள்ளார்.