ஆன்லைன் சூதாட்டத்தில் அரசியல் கூடாது – அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் நடக்கும் பிரச்சனையாக ஆன்லைன் சூதாட்டம் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் நடக்கும் பிரச்சனையாக ஆன்லைன் சூதாட்டம் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் அரசியல் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். அவர் கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் நடக்கும் பிரச்சனையாக ஆன்லைன் சூதாட்டம் உள்ளது என கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட அவரச சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்தில் தினந்தோறும் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே, மசோதாவிற்கு தாமதப்படுத்தாமல் விரைந்து ஓப்புதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.