'இந்திய குடிமகனாக இல்லாதவருக்கு ரேஷன் அட்டை இல்லை' – தமிழக அரசு

ஒரே நபர் இரண்டு ரேஷன் அட்டை வைத்துள்ளார்களா? என்பது குறித்து களஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு.

ஒரே நபர் இரண்டு ரேஷன் அட்டை வைத்துள்ளார்களா? என்பது குறித்து களஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு.

இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்க கூடாது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை வழங்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது எனவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

unknown node

திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ஒரே நபர் தமிழகம், வெளிமாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. களவிசாரணை செய்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு உண்பொருள் வழங்கல் துறை ஆணையிட்டுள்ளது.