தெய்வ பக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் விசாரணையின்போது, தெய்வ பக்தியற்றவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.