வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் எதிர்பார்த்த அளவு கூடுதலாக 15 சதவீத மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் எதிர்பார்த்த அளவு கூடுதலாக 15 சதவீத மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்த நிலையில்,  அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் இன்று வரை 42 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் எதிர்பார்த்த அளவு கூடுதலாக 15 சதவீத மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.