இனி 5 நிமிடத்திற்கு 1 ரயில்..! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

Metro train services from today will be at peak hours from 8 am to 10 pm and from 4 pm to 7 pm at five minute intervals

சென்னை மெட்ரோ ரயில் நிர்வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கை கருத்தில்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் ( peak hours) 7  நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.

எனவே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (peak hours) காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் காலை 5. 30 மணி முதல் 8 மணி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி முதல் இரவு 11 மணிவரை 28 நிமிடங்களுக்கு பதிலாக  15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் உச்ச மணி நேரம் இல்லாமல் (non- peak hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.